சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடந்தது. நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், அரசு தரப்பில் சி, எஸ். வைத்தியநாதன், தி.மு.க சார்பில் சண்முகசுந்தரம், வில்சன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
பதில் மனு:
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், விதிகளுக்கு உட்பட்டு முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இடம் ஒதுக்குவதில் தமிழக அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
திமுக வாதம்
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் ஒப்பிடக்கூடாது. ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யாவிட்டால், மக்கள் மனம் புண்படும். பாரபட்சம் காட்டுவதாகிவிடும். அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குவதில் சட்டச்சிக்கல் இல்லை என வாதாடப்பட்டது.
மீண்டும் வாதம்
தமிழக அரசு வழக்கறிஞர் மீண்டும் வாதாடுகையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இது வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் திமுக இதனை அரசியலாக்குகிறது எனக்கூறினார்.
தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Betway Casino - Mapyro
ReplyDeleteBetway is a New Zealand 안산 출장마사지 gambling operator 이천 출장샵 that was formed in 2004 with 전라북도 출장마사지 offices in 충청북도 출장샵 Malta and Ireland. It's been operating since 2004. Find your complete 광주광역 출장안마