சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இன்று ( ஆக.,7) மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த, 'டிரக்கியோஸ்டமி' என்ற, செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.
மஞ்சள் காமாலை
அக்கருவி மாற்றப்பட்டதால், கருணாநிதிக்கு தொற்று உருவானது. இதனால், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. சளித் தொல்லை காரணமாகவும், அவர் அவதிப்பட்டார். சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 28 நள்ளிரவில், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, உடல் நிலை மோசமானது. அதையடுத்து, அதிகாலை, 1:30 மணிக்கு, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.
காலமானார்
இருப்பினும் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால்,அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை கேட்ட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
ReplyDelete*"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"*
முதல் இரங்கல்
முத்தமிழ் அறிஞருக்கு!
தமிழில் அஞ்சலி
இல்லையில்லை
*தமிழுக்கே அஞ்சலி!*
*உதயசூரியனுக்கு உறுப்பு நின்றது*
கருப்பு செவப்பு இன்று
காலத்தை வென்றது
*கலைஞர்எனும் கவியியல்
தமிழகத்தின் புவியியல்
தரணியில் வரலாறானது
அறிவியலாளர்களே!
குறித்துக்கொள்ளுங்கள்
இன்று
இறந்தவருக்கு
இரண்டு
இதயம்
இருந்துள்ளது.
இன்று
ஆழ்வார் பாடிய காவிரியில்
தண்ணீர் ஓடுகிறது!
ஆழ்வார்பேட்டை காவிரியில்
கண்ணீர் ஓடுகிறது
அண்ணா பாதையில் நடைகண்டவர்
செந்நா போதகருக்கு சிலை கண்டவர்
சிலையானார்!
*ராஜகுமாரியில்* ஆரம்பித்து
*ராமானுஜரில்* நிறைவுசெய்த
ராஜ்ஜியம்
ஏய்
ஆடிகாத்தே!
வழக்கமா அம்மியத்தான
அசைப்ப...
ஆர்பரித்து ஏன்
*ஆலமரத்தை*
அசைத்துள்ளாய்?
ஆறாம் மாதத்தில் பிறந்து
ஆறு சரித்திர நாவல்களை தந்தவரே!
தரித்திரங்களை கொன்றவரே!
ஒண்ணரை சதம் நூல்தந்து
மண்ணரை செல்லும் மன்னவா!
வள்ளுவனுக்கு கோட்டம் தந்து
வான்புகழ் கொண்டவா!
கண்டிக்கிறேன்!
கண்டிக்கிறேன்!
காலனை
கண்டிக்கிறேன்!
கணக்கை தப்பாக போட்டு
கண்ணில் உப்பாக
கடலை வரவழைத்த
காலனை கண்டிக்கிறேன்!
பாவிப்பய எமனே !
பா வித்தகன் இவனே
என்பதை அறியா
பாடைக்கு பிறந்தவனே!
மேடைக்கு பிறந்தவனை
மேன்மைகளை புரிந்தவனை ஏன்
மேலே
அழைத்துக்கொண்டாய்
பதிமூன்று மூன்றுமுறை
வென்றவர்
பார் முழுதும் நின்றவர்
பரிதவிக்கவிட்டு சென்றவர்.
*பாரதிக்குப்பின்*
*பராசக்தி அழுகிறாள்*
சமத்துவபுரம் கண்டவர்
சமாதிக்குள் செல்கிறார்
இல்லை
சரித்திரத்தை வெல்கிறார்.
*சங்கதமிழ்* தந்த
சந்ததமிழே! உன்
சரிரம் அடங்கினாலும் உன்
சப்தம் அடங்காது.
நடமாடும்
நூலகம்
இன்றுமுதல்
நேரடி பணியை நிறுத்தி கொண்டது.
இந்த தேசத்தில்
மொழிக்காக போராடி
செம்மொழிக்காக வாதாடி
வெயில் காத்த காத்தாடி
நின்று போச்சே அம்மாடி.
மூப்பின் காரணமாக
மூச்சுநின்றது என்றாலும்
யாப்பின் காரணமாக
யார் கண்ணும் கட்டவில்லை இங்கு
ஒப்புக்கு அழவில்லை ஒருவரும்
ஒத்துக்கொண்டு அழுகின்றனர்
அனைவரும்
*தமிழின தலைவர்* நீ என்பதை
தோணி சதமடிப்பார்
எனபதைவிட
திருக்குவளை கேணி
சதமடிப்பாய் என
நம்பினோம்.
எம்
நம்பிக்கை ஒடிந்தது இதய
நாலறையும் இடிந்தது.
சூரியனிலிருந்து
பிரிந்து வந்த பூமிக்குள்
சூரியனை எப்படி புதைப்பது? இனி
பகுத்தறிவை யார்
விதைப்பது?
*தமிழ் இனி* *மெல்லசாகும்* என்றான்
பாரதி இப்போதுதான்
அர்த்தம் விளங்குது.
அகிலம் கலங்குது.
தமிழ்தாயின்
தலைமகனே!
தரணிபோற்றும்
தமிழ்மகனே!
உம்மை புதைத்தாலும் நீ
*தொழுஉரம்!*
கண்ணை இமைக்காமல்
*தொழுகிறோம்!*
இடைவிடாமல் அழுகிறோம்.
பூம்புகார் வாயில் தந்தவரே!
புராணத்தில் வழியில் வந்த
புருடர்களை நான் எப்படி
எதிர்கொள்வேன்?
போக்குவரத்தை தூக்கி
நிறுத்திய தேக்குமரம்
குடிசைகளை கோபுரமாக்கிய
கொடிமரம்
அசையமறுத்தது ஏன்?
அறிவியலானது வீண்!
இனி எப்படி வாழ்வேன் நான்!
கண்ணுக்கு முகாம்
கண்ட
*கண்ணப்பருக்கு*
*கல்லரையா?*
முரசொலி தன்
மூச்சுக்காற்றை
நிறுத்திக் கொண்டது.
மூன்றுகோடி தொண்டர்களை
நிறுத்தி கொன்றது.
மண்ணை ஆண்ட
*அண்ணாவின் தம்பி*
விண்னை ஆழப்போகிறார்!
என்னை
அழவைக்கிறார்!
திமுகாவின் தலைவா!
ஏடு பிடித்த *ஏகலைவா!*
இரந்து கேட்ட எமன்மீது
இறக்கம் கொண்டது ஏன்?
மழலை மாறா என் மகள்
வளர்ந்து வந்து
வாய் திறந்து கேட்பாள்..
தமிழென்றால் என்னப்பா?
ஊருக்கே தமிழை ஊட்டிவளர்த்த நான்
என் மகளுக்கு
தமிழை எப்படி
காட்டி வளர்ப்பேன்?
*கனத்த இதயத்துடன்*
முடக்குசாலை
*புலவர்* ம.இளங்கோவன்
9994994339
மதுரை