திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: வயது முதிர்வின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள்:
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏறப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். திமுக தொண்டர்களும் கவலையுடன் பெருந்திரளாக மருத்தவமனையில் குவிந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com