எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
* உலக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது என சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
* ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது தலைமையிலான அரசின் நோக்கம்..
* இன்று நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது.
* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
* ஏ.டி.எம்.க்கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நாளை வங்கிகள், தபால் நிலையங்கள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.
* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
* நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிரமத்திற்காக வருந்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com