காரணம் என்னவெனில் மறுநாள் பிப்ரவரி 10 ஆம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் நடத்தும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ பங்கேற்பதை தடுக்கவே பேச்சுவார்த்தை எனும் மாயவலை..விரிக்கப்பதற்காக அழைக்கிறது..
பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன் ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது..
அந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் அன்று மாலையே மீண்டும் உயர்மட்டக்குழு கூடி அன்றே அடுத்தட்ட போராட்டத்தை அறிவிப்பது என்ற முக்கியமான முடிவுகள் உள்ளிட்ட மூன்று முடிவுகள் எடுக்கப்படுகிறது..
பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.. நமது கோரிக்கைகளை அமைச்சர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் நன்கு கேட்டுவிட்டு, முதல்வரிடம் இதுபற்றி கூறுவதாகவும், விரைவில் நல்ல செய்தி பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அமைச்சர்கள் வாய்மொழியாகக் கூறுகின்றனர்.
அமைச்சர்களின் வாய்மொழி உறுதியை நம்பி ஜாக்டோ வெளியேறுகிறது.
பேச்சுவார்த்தை வெற்றி என்பது நமது கோரிக்கைகளை ஏற்று எழுத்து பூர்வமாக ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்..
ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.
அமைச்சர்களின் வாய்மொழி உறுதி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எவ்வாறு நம்புவது..
எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது அடுத்த கட்ட போரட்டத்தை இன்றே அறிவியுங்கள் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர் கூறுகிறார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த ஜாக்டோ தலைவர்கள் பட்ஜெட் வரை காத்திருந்து நமது கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பு வெளியாகவில்லை எனில் அதன் பிறகு உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்து அடுத்தகட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும்.. எனக் கூறப்பட்டது..
ஆனால் பட்ஜெட் எத்தனை நாட்கள் நடைபெறும் எப்போது அறிவிப்பார்கள் என்பது நமக்கு தெரியாது..
ஒருவேளை நமது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அதன் பிறகு போராட்டம் நடத்த போதிய கால அவகாசம் இல்லை..
ஏனெனில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது..
பிப்ரவரி 29 வரை மட்டுமே அதிகாரம் உள்ள முழுமையான அரசாக செயல்பட முடியும்..
மார்ச்சில் இருந்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காபந்து (எந்த அதிகாரமும் இல்லாத அரசு) அரசாக மாறிவிடும்..
அதன்பிறகு முதல்வரே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது..
TNPTFன் ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறுஞ்செய்தி மூலம் கருத்துகள் கேட்கப்பட்டு மாநில செயற்குழு கூட்டப்பட்டு அனைவரின் ஏகோபித்த கருத்தாக பிப்ரவரி 15 முதல் தொடர்வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது..
இடைநிலை ஆசிரியரின் ஊதிய விகித பிரச்சினையை இந்த தருணத்தில் தீர்க்காவிட்டால் இனி எந்த காலத்திலும் தீர்க்க முடியாது எனும் எண்ணத்தின் அடிப்படையில் நமது கோரிக்கையை ஏற்க அரசை நிர்பந்திக்க பிப்ரவரி 15ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இறங்குகிறது..
இது ஜாக்டோவை உடைக்கும் முயற்சி அல்ல..
எப்பொழுதுமே.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோவிலே அங்கம் வகிக்கும்..
இடைநிலை ஆசிரியனின் ஊதியத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுக்க அனைத்து சங்கங்களையும் முன்னெடுத்து அழைத்துச் செல்லும் போராட்டம்.
இந்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய பிரச்சனை பிரதான கோரிக்கையாக முன்னெடுத்து செல்லப்படும்
நாளை முதல் நடைபெறும் தொடர் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த போராட்டத்தில் சங்கம் பாராது தன்மானமுள்ள ஒவ்வொரு இடைநிலை ஆசிரியரும் தன்னை இணைத்துக் கொள்ள முன் வர வேண்டும்..
கோரிக்கையை வென்றெடுக்கும் வரை நமது கோரிக்கை முழக்கம் ஓயாது..
இறுதி வெற்றி நமதே...
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com