நிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள்
2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்
பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின்
கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய
ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள்
ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு
நிதித்துறை சார்பான கடிதம் 55891/Paycell /2015-1, Date: 08.10.2015ல்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் பத்தி 4 - ன் இறுதியில் for examining pay anomalies in the ensuing pay commission / committee என்று உள்ளது. (ensuing என்ற வார்த்தைக்கு வருகிற, வரப்போகிற என்ற பொருள் அகராதியில் உள்ளது.
ஆசிரியர்கள் போராடி வருகிற இந்நாட்களில்,
இயக்குனர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் அடுத்த ஊதிய குழுவில் ஊதிய
முரண்பாடுகள் சரிசெய்யப்படும் என்று கூறப்பட்ட தகவல் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறுள்ள நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப்
போராட்டம் செய்த நாளன்று வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கடிதத்தில் வருகிற
(ensuing) pay commission /committee - யில் ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்ய
(for examining pay anomalies) பணிநிலை சார்ந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற ஊதிய குழுவிலே ஊதிய முரண்பாடுகளை ஆய்வு
செய்ய இவ்வாறாக தகவல் கோருவதன் மூலம், தற்போது ஊதிய முரண்பாடுகள்
களையப்படாது என்று தெரிவிப்பதாகவே உள்ளது நிதித்துறையின் கடிதம்.
பத்தி 4 - ன் துவக்கத்தில் தனிநபர் /சங்கங்கள்
மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ள போது seeking further
pay revision citing the parity in the earlier pay revisions என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய ஊதிய திருத்தங்களில் ( earlier pay
commissions ) இருந்த ஒற்றுமையை குறிப்பிட்டு ( citing the parity ) ஊதிய
திருத்தம் ( further pay revisions ) கோரி வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக இக்கடிதத்தில் நிதித்துறையே குறிப்பிட்டுள்ளதன் மூலம்
முந்தைய ஊதிய குழுக்களில் parity - ஒற்றுமை காணப்பட்டதை நிதித்துறை
ஏற்றுக்கொள்வதாகவே பொருள் கொள்ளலாம்.
ஆனால் ஆறாவது ஊதியகுழுவில் Diploma
படித்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் Diploma கல்வித்தகுதி உடைய
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படாததோடு மட்டுமல்லாமல் இடைநிலை ஆசிரியர்
பதவிக்கான கல்வித்தகுதி S.S.L.C. மற்றும் Certificate course என்று தவறான
தகவல் குறிப்பிட்டு ஆசிரியர்கள் கொச்சைப்படுத்தப்பட்டது இந்த இடத்தில்
உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது.
ஊதிய முரண்பாடுகளுக்கு போராடி வருகிற
நிலையுடன், தற்போது நிதித்துறை மூலம் பணிசார்ந்த தகவல் கோரப்பட்டுள்ள
நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி
மற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களின் duties and responsibilities உள்ளிட்ட
கோரப்பட்டுள்ள அனைத்து தகவல்களை சரியாக முழுமையாக நிதித்துறைக்கு,
கல்வித்துறை வழங்கிட, ஆசிரியர் சங்கங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
சிறிய சங்கம், பெரிய சங்கம் என்ற வேறுபாடுகளை
மறந்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையால் உயர்வை அடைய
அனைவரும் முன்வர வேண்டும். நம்மிடையே உள்ள வேறுபாடுகளை களைவோம், ஊதிய
முரண்பாடுகளை களையும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.
திரு. தாமஸ் ராக்லேண்ட், துணை பொது செயலாளர், திருச்சி
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com