ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அவரது உத்தரவின்படி, மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.இவற்றில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் இல்லை என, தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும், 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும் வகையில், சிறப்புமுகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி இயக்குனரகத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக, அதிகாரிகள்தெரிவித்தனர்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com