திருப்பூர் மாவட்டம், உடுமலை, மலையாண்டிபட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 88 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. தரமில்லாத சத்துணவு வழங்கப்பட்டதால், சில குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, பி.டி.ஓ., பழனிவேல் கூறியதாவது: சத்துணவுக்கான பொருட்களை வாங்கும்போது, சத்துணவு பணியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கவனமாக வாங்க வேண்டும். பொருட்கள், தரமில்லாமல் இருப்பதை அறிந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, தரமான பொருட்களை பெற்று உணவு தயாரிக்க வேண்டும்.
பணியிட மாற்றம்
தற்போது வழங்கப்பட்ட தரமற்ற பொருட்களுக்கு மாற்றாக, வேறு பொருட்கள் வழங்கப்படும். இது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர் சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் இதுபோன்று அலட்சியமாக செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com