இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க அரசு தரப்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் அரசு அதனை இறுதி செய்யவில்லை என்று கூறினர்.
மேலும் அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணையின் போது இந்த விதிகள் வகுக்கப்படாவிட்டால், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா, ஜூன் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com