சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது; மாலை 7:00 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
டேப்லெட் பரிசு
வழிகாட்டி நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட, கல்வியியல் வல்லுனர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
காலை 10:00 முதல், 11:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரையிலும், தினமும் இரண்டு வேளைகளில், வல்லுனர்கள், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவர். அப்போது, மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிப்பர்.
அந்த நிகழ்ச்சிகளின் முடிவில், மாணவர்களிடமும் சில கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளுக்கு சிறந்த பதில்களை சொல்லும் மாணவர்களுக்கு, டேப்லெட் மற்றும் கைக்கடிகாரங்கள் பரிசாக வழங்கப்படும்.
அரங்குகளில், பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளுக்குமான சிறந்த கல்லூரிகளும், அவற்றின் வசதிகளும் குறித்து, அந்தந்த கல்லூரியினர் கூறும் விளக்கங்களை, நேரடியாக பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.
அனுமதி இலவசம்
குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் எதிர்காலம் குறித்த, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும், கல்வி, கல்லூரிகள், வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் அடங்கிய, வழிகாட்டி எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில், சிறந்த உணவு அரங்குகளும் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சியை, டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், தினமலர் நாளிதழுடன் இணைந்து வழங்குகின்றன.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com