இந்நிலையில், தேர்வு குறித்து டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 32 மாவட்டங்களில், 499 மையங்களில் நடக்கிறது. இதில், 2.02 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும், 34 மையங்களில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை நடத்தும் மண்டல அதிகாரிகளாக செயல்படுவர்.
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 மாவட்டங்களுக்கும் தேர்வு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, போதுமான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தரை தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற தேர்வர்களுக்கு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com