இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கும், ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேரவும் தடை விதித்தார்.
அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியல் இடப்படாத நிலையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வியாழக்கிழமை ஆஜராகி, ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். அவர் மேலும் வாதிடும்போது, ‘வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை.
மதுரை கிளையில் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள், ’தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் தயாராகவில்லை. எதிர் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறியதுடன், அரசின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’என்றனர்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com