பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில்வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும்தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகிவாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
WEIGHTAGE MURAIYAI CANCEL PANNA VENDUM
ReplyDeleteT.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?
ReplyDeleteமாண்புமிகு முதல்வர் அம்மா,
ReplyDeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.