பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக,காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசின் அறிவிக்கை, மத்திய அரசின்அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் அஜித் சேத் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி தனது சுதந்திர தின உரையின்போது, "தூய்மை இந்தியா' பிரசாரத்தை அறிவித்தார். அதன்படி, வரும் அக்டோபர் 2-ந் தேதி இந்தப் பிரசாரத்தை அவர் தொடங்கவுள்ளார்.இதன் ஒரு பகுதியாக, அன்றைய தினத்தன்று, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, அனைத்து மத்திய அமைச்சக அலுவலகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமரின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தில் ஒவ்வொரு அமைச்சகமும் கட்டாயம் கலந்து கொண்டு, தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com