பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு தாள் - 1லும் தேர்ச்சி பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கான அறிவிப்பு இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் 2012-13, அறிவிக்கை எண்.06/2014, நாள் 21.08.2014-க்கான தமிழ்ந நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களின் பட்டியலிலிருந்து தாள்-2ல் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே 10.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.
எனினும், ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது தெரிவினை ரத்து செடீநுது, இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டுமே தங்களை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவிக்க விரும்பின் அவர்கள் மட்டும் 25.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரில் வருகைபுரிந்து அதற்குரிய எழுத்து பூர்வமான விருப்பக் கடிதத்தினை சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள், எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் வருகை தர வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
உறுப்பினர் செயலர்
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com