பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை வகித்துப் பேசினார்(படம்).பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா பேசியதாவது:கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013இல் 453 பள்ளிகளாகவும், 2014இல் 887 பள்ளிகள் என 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.அதேபோல் பிளஸ் 2 தேர்வில், 2013ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.அதேபோன்று, நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன.
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மற்றும் 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com