தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி
நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது
.
ReplyDeleteதெ௫வுக்கு தெ௫ மதுபானக்கடைகளை
திறக்கும் அரசு
ஆசிரியர் நியமன பிரச்சனையை 1 வ௫டமாக கண்டுகொள்ளாதது ஏனோ ?
செய்வீர்களா
நீங்கள் செய்வீர்களா
என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
இப்போது எங்கள் பிரச்சனையில்
நியாமாக ஏதேனும்
செய்வீர்களா ?
வாங்கு வங்கி அரசியலுக்காக
2014 MP தேர்தலை மனதில்கொண்டு
6 மாதம்
முனபே முடிந்த Tet தேர்வுக்கு 5% தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்
உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
மீது அக்கறையி௫ந்தால்
காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
அப்போது எந்த தேர்தலும் இல்லை.
இவர்கள் கூற்றுபடி 2012ல்
TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
காரணம் தேர்தல் நேரம்.
இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.
நாங்கள்
தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை
B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
இல்லை
உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?
தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
அரசின் தவறான முடிவுகளால்
90
மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
அதை மீட்டெடுக்கும் நேரமீது.
Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம்.
இவ் அறவழிபோரட்டம் பற்றிய
செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Message மெசேஸ்
Facebook
Twitter
YouTube
What's app போன்ற சமூக தளங்களில்
பகி௫ங்கள்
.
ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
சென்னைக்கு....
புதியதொர் விதியைப்படைப்போம்
தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....
உங்களுக்கு தேவைப்பட்டால்
இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
P.Rajalingam Puliangudi
Contact : 95430 79848
94432 64239.
.
TET is mere a eligibility exam, One more TRB exam has to be condcuted among TET qualified candidates (Branch wise) or seniority should be considered.
ReplyDeleteCORRECT...
Deleteகணினி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லையா? அரசு கண் திறக்கவில்லையா? ஏன் இவர்களுக்கு(கணினி ஆசிரியர்) மட்டும் இந்த அவல நிலை.
ReplyDeleteகணினி ஆசிரியர் பணியிடம் நிரப்படுவதற்கான ஒரு அறிவிப்பும் வரவில்லை.
பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வுக்கூடம் இருக்கின்றதா?, கணினி பிரிவுகள் இருக்கின்றதா? கணினி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லையா?
அரசுக்கு கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்று தெரியாதா? பள்ளிக்கல்வித் துறை செயரலருக்கு தெரியாதா? என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆசிரியர் பணி அமர்த்துவதில் ஏன் இந்த குழப்பம், தாமதம் ஏன்.
கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வித் துறையே! தூங்க வேண்டம் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆவண செய்யுங்கள்.
கணினியில் B.Sc., B.Ed., முடித்துவிட்டு பல ஆண்டுகளாக இந்த பணிக்காக காத்திருக்கிறோம்.
உச்சநீதி மன்ற ஆணையை செயல்படுத்துங்கள். தீர்ப்பு வந்து 7 மாங்கள் ஆகியும் இந்த கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தமிக அரசே!, கல்வித்துறையே! கண் திறந்து பாருங்கள் எங்கள் நிலையை.
நாங்கள் நித்தம், நித்தம் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய அழுகுரல் கேட்க வில்லையா?
No parents for somebody they also now calling amma.
ReplyDeleteAGE seniority should be considered.in paper -1.
ReplyDeleteplease sir,
paper-1,please seniority should be considered.
ReplyDelete