இதற்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், நுகர்வோரிடம் இருந்து, மொபைல் எண் பெறப்பட்டு வருகிறது. இலவச மின் இணைப்பு பெற்றுள்ள குடிசை, விவசாயிகளுக்கு, இந்த சேவை இல்லை என, தெரிகிறது. எஸ்.எம்.எஸ்., சேவை கேட்டு, நேற்று வரை, 2 கோடி மின் நுகர்வோர், மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளனர். எஞ்சியுள்ளவர்களும், விரைவாக மொபைல் எண்ணை பதிவு செய்ய வசதியாக, மின் வாரிய இணையதளத்தில், பிரத்யேக வசதி துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி,
Tangedco இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
Billing services என்ற பகுதியை,"கிளிக்' செய்ய வேண்டும்
அதில், "Mobile Number Registration' என்ற இடத்தில், மின் நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை திட்டம், ஜூன், முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதிகம் படித்தவர்களுக்கு அக்கறை இல்லை! : எஸ்.எம்.எஸ்., சேவை கேட்டு, கிராமங்களில் வசிப்போர் கூட, ஆர்வமுடன் மொபைல் எண்ணை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அதிகம் படித்தவர்கள் உள்ள, அடையாறு, தாம்பரம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய, சென்னை தெற்கு மாவட்டத்தில், ஒரு சிலரே இதுவரை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com