கடந்த கல்வி ஆண்டு முதல், "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்து, மே- மாதத்தில், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி, டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. இதனால், பள்ளி துவங்கும் ஜூன் மாதத்தில், ஆசிரியர்கள் அவர்கள் மாறுதல் பெற்று சென்ற பள்ளியில், சேர்ந்து பணியை துவக்கினர்.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக கூறி, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, இது வரை ஆசிரியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மே இறுதியில், கல்வித்துறை விரைந்து, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தினால், ஆசிரியர்களின் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று, சேர்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும், நகர்புறங்களை ஒட்டியுள்ள பள்ளிகளின் ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டே, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதை தவிர்த்து, வெளிப்படையான கவுன்சிலிங்கை, தமிழக அரசு நடத்தவேண்டும், என்றார்.
Whether Teachers who were appointed in 2012 TET are eligible to apply for transfer or not...those who know clear my doubt, please
ReplyDeleteyes ofcourse you can apply for transfer, minimum 1 year service in enough to apply, but in senority wise you may be at last........
DeleteBlocking vacancies should be curtailed
ReplyDelete