வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படு்த்தப்படும் மேஜை ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு முகவரை நியமித்துக்கொள்ள வேட்பாளருக்கு அனுமதியுள்ளது. ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும், மேஜைகளில் இருந்து வரும் 17சி-படிவம், மையத்தின் தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்படும். அதை சரிபார்த்த பின்பு, இறுதி முடிவு படிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை தேர்தல் அலுவலர் அறிவிப்பார்.
வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். முறைகேடு நடப்பதாகத் தெரிந்தால், இறுதி முடிவை அறிவிக்காமல் நிறுத்திவைக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. பிற்பகலிலேயே முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்துவிடும்.
அடுத்து ஆட்சி அமைக்கப்போகும், கட்சி அல்லது கூட்டணி எது என்ற கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்குள் முடிந்து இறுதி முடிவு வெளியாகிவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com