ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர இதுவரை 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பில் (டிப்ளமோ) ஆண்டுக்காண்டு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. இரண்டாண்டு ஆசிரியர் டிப்ளமோ பயிற்சிக்கு அரசு ஒதுக்கீட்டில் மட்டும் 20 ஆயிரம் இடங்கள் உள்ளன.கடந்த ஆண்டுகளில் இப்படிப்பை முடித்த பல ஆயிரம் பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் உள்ளனர்.இதன் காரணமாக ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை வரை சுமார் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக ஆசிரியர் பயிற்சி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.எனவே மேலும் 500 விண்ணப்பங்கள் வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இப்படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் சில பயிற்சி நிறுவனங்களில் மிக குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் சேர்ந்து பயின்று வருகின்றனர். குறைந்த அளவே விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 2வது வாரத்துக்கு பிறகு கலந்தாய்வு நடத்த ஆசிரியர் பயிற்சி வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com