இந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேரும், மாணவிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். இதில் மாணவர்கள் 88 சதவீதமும் தேர்ச்சி மாணவிகள் 93.6 சதவீதமும், பெற்றுள்ளனர். 7 லடச்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது .
ஆயிரக்கணக்கானோர்: 100 க்கு 100 மார்க்குகள் : பாடவாரியாக 100 க்கு 100 மார்க்குகள் பல ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதன்படி கணிதத்தில் 18 ஆயிரத்து 682 பேரும், அறிவியலில் 69 ஆயிரத்து 590, சமூக அறிவியலில் 26 ஆயிரத்து 554 பேரும் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பலர் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதலிடம் பிடித்த 19 மாணவர்கள் : 10ம் வகுப்பு தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ; அக்ஷயா (தர்மபுரி), பாஹிரா பானு (சேரன்மாதேவி), தீப்தி (தர்மபுரி), தீப்தி (தர்மபுரி), காவ்யா (கிருஷ்ணகிரி), கயல்விழி (தர்மபுரி), கீர்த்திகா (கள்ளக்குறிச்சி), கிருத்திகா (தர்மபுரி), மகேஷ் லக்ஹிரு (பட்டுக்கோட்டை), மீவிழி (தர்மபுரி), ரேவதி அபர்ணா (தர்மபுரி), சஞ்சனா (மேலூர்), சந்தியா (தர்மபுரி), சந்தியா (தூத்துக்குடி), ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை), ஸ்ரீவந்தனா (தர்மபுரி), ஸ்ரீரத்தினமணி (விருதுநகர்), சுப்ரிதா (தென்காசி), வர்ஷினி (திருப்பூர்).
மதுரையை சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி சமஸ்கிருதம் மொழிப்பாடமாக எடுத்து 500 க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார். இது போல் தமிழ் அல்லாமல் பிற மொழிப்பாடம் எடுத்து ஹேமவர்சினி (வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி) , விஜயமூர்த்தி, 2 பேர் 500க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com