மாநில அளவில், அதிக எண்ணிக்கையில் கலந்தாய்வில் பங்கேற்கும் அரசு ஊழியர்களை கொண்ட துறை பள்ளிக்கல்வித்துறை. ஒவ்வொரு ஆண்டும்,
10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெறுகின்றனர். மே இறுதியில் நடக்க வேண்டிய கலந்தாய்வுக்கு, பள்ளிக்கல்வித்துறை விண்ணப்பங்களை இதுவரை வினியோகிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பணிகளை காரணம் காட்டி, கலந்தாய்வுக்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல், மெத்தனமாக கல்வி அதிகாரிகள் செயல்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், கலந்தாய்வில் இடங்களை மறைத்தல், அரசியல் தலையீடு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. தற்போது தேர்தல் என்ற காரணம் காட்டி கலந்தாய்வை தாமதப்படுத்துவதால், முறைகேடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது தவிர, ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்துவதால், இடமாறுதல் பெறும் ஆசிரியர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதும், குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மிகுந்த சிரமமாக உள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''வழக்கமாக, ஏப்ரல் 10ல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். ஆனால், இந்தாண்டு இதுவரை எந்த தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், உடனடியாக காலிபணியிடங்களை வெளியிட்டு, ஒளிவுமறைவு இல்லாத கலந்தாய்வை மே இறுதிக்குள் நடத்தவேண்டும்,'' என்றார்.
பல ஆண்டுகளாக மாறுதல் கிடைக்காமல் ஏராளமான ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கூறியுள்ள படி பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடுகின்றன.
ReplyDeleteமேலும், பல ஆண்டுகளாக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, புதிதாக நியமனம் பெறுபவர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி நியமனம் வழங்குகின்றனர். இதனால், மூத்த ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, இந்த முறையாவது
ஒளிவு மறைவில்லாமல் நேர்மையான முறையில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சொந்த மாவடட்த்திற்கு செல்ல முடியாவிட்டாலும் கணவர் அல்லது மனைவி பணிபுரிவதாலோ, பிள்ளைகளின் கல்வி நிமித்தமாகவோ, தனது அல்லது பெற்றோரின் மருத்துவ வசதிக்காகவோ ஒருவர் தான் விரும்பிய வேறு ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு செல்ல விரும்பலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு தற்போதைய கல்ந்தாய்வு முறையில் இல்லை. தற்போதைய முறையில் சில மாவட்டங்களை மட்டும் கொண்ட ஏதேனும் ஒரு பகுதிக்குள்(Zone) மட்டும் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த பகுதியை தவிர்த்து வேறு பகுதியில் விருப்பமான மாவட்டம் இருந்தால் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆனால், புதிய ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது ஒரு ஆசிரியருக்கு சொந்த மாவட்டம் கிடைக்கவில்லையென்றால் அடுத்தபடியாக தான்விரும்பும் வேறு ஏதாவது ஒரு மாவட்டத்தை தெரிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மற்ற பணி நியமன கலந்தாய்வுகளிலும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது. எனவே, இனி நடைபெறும் மாறுதல் கலந்தாய்வுகளில் எந்த மாவட்டத்தை வேண்டுமானாலும் தெரிவு செய்யும் வசதியை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தித்தர வேண்டும்.இதன் மூலம் ஏராளமான ஆசிரியர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை உருவாக்க முடியும்.