தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ
கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது.
முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது.
இந்த
கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில
வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்
2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும்
கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை
மக்களை பாதுகாக்க முடியும்.
அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில்
ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை
அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம்
பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள்
நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புலமை மிக அவசியம் தேவை. அனைத்து ”அரசு” அபள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவங்கி நடத்த முடிவு செய்தது நல்லது.அனால் ஆங்கில வழிக்கல்வி போதிக்க தகுதியான போதுமான ஆசிரியா்கள் நியமித்து சிறப்பாக நடத்த வேண்டும். இல்லையேல் தமிழும் ஆங்கிலமும் தெரியாத தலைமுறைஉருவாகும் ஆபத்துள்ளது.
ReplyDeletethanyaar pallikalil pani puriyum aasiriyarkal anaivarum aangila pulamai mikkavaro?..
Deleteஅரசு பள்ளியையும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களை மட்டும்தான் அரசு நேசிக்கின்றது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களை அரசு ஏன் வஞசிக்க வேண்டும் என்று தெரியவில்லை. அரசு பள்ளிகளில் ”ஆங்கில வழிக்கல்வி”
ReplyDeleteதுவக்கும் போது இதற்கு ஆகும் ஆசிரியார் ஊதியம் போன்ற செலவுகளை அரசே ஏற்கும். ஆங்கில வழிக்கல்வி இலவசமாக அரசு பள்ளி அமைந்துள்ள ஊர்களில் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்க வழி வகை செய்துள்ளது.
ஆனால் தமிழ் வழி கல்வி போதிக்கும் தனியார் பள்ளிகளில் ”ஆங்கில வழி கல்வி” அளிக்க அரசு நிதி உதவி ஏதும் அளிக்க மறுத்து வருகின்றது. ஆக அரசின் தவறான கொள்கை முடிவால் 1.அரசு பள்ளி அமைந்துள்ள ஊர்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இலவசமாகவும் 2. தனியார் தமிழ்வழி பள்ளிகள் அமைந்துள்ள ஊர்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கட்டணக்கல்வியாகவே இருக்க முடியும்.
3.மேலும் சுயநிதியில் ஆங்கில வழி வகுப்புக்களை நடத்த விரும்பாத தனியா் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வி எட்டாக்கனியாகிவிடுகின்றது. தனியார் பள்ளிகள் அமைந்துள்ள ஊரில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு அரசு அநீதி செய்கின்றது போல் உள்ளதே.நியாயமா ?
அரசு பள்ளிகளில் ஒரு திட்டம் எந்த நிபந்தனைபடி துவக்கப்படுகின்றதோ அதன்படியே தனியார் பள்ளிகளிலும் அத்திட்டம் நடத்தப்பட அரசு உதவிட வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு நியாயம் தனியார் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அநீதி யை ஏற்படுத்தும் இத்தகைய நிலையை அரசு நிறுத்த வேண்டும். உறுதியான நடவடிக்கைகள் மூலம் தகுதியான தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்து நிதி உதவியுடன் ஆங்கில வழிக்கல்வி துவக்க அரசு திருத்தப்பட்ட அரசானை வெளியிட வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களை வெறுப்பது அரசிற்கு அழகல்ல. இல்லையெனில் அனைத்து தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளை அரசு உடைமை ஆக்க விடுங்களேன் !
1asasu pallikal illatha idathil nadakkum thanyaar thamizh vazhi pallikalal maanavarkalukku aangila vazhi kalvi etta kani endra kootru saryaanathu alla, avvaaru arasu pallikal illatha oor enpathu mikavum arithanathu. . 2.thaniyar thamizh vazhi pallikal kattanam vasoolithu thanae pallikalai nadathukinrana? athe kattanaththai kondu aangila vazhiyil palliyai nadaththalamae?
Deleteitharku etharku arasin uthavi veru vendumaa? maanvarkalidam vasool seivathu pothavillaya?
கல்விச் சோலையை படிக்கும் அறிவாளிகளில் இப்படியும் கடிதம் எழுதும் அன்பர்கள் இருப்பது ஆச்சரியமே. ”மாணவர்களிடம் வசுல் செய்தது போதவில்லையா ?” ---- தனியார் பள்ளிகளுக்கு போதிய அரசு பணியிடங்களையும் நிதி உதவிகளையும் அரசு பள்ளிகளுக்கு வழங்குவதுபோல் வழங்கிவிட்டு கட்டணங்களை முறைபடுத்த ஏன் அரசால் முடியாது? முடியும். பள்ளி துவங்க இன்னும் 27 நாட்கள் உள்ளன.அரசு பள்ளிகளில் அசிரியா் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளதே? ஏன் ? படித்த மக்கள் எப்படி அரசு பள்ளியை நம்பி குழந்தைகளை அனுப்புவார்கள் ? இளநிலை உதவியாளர்,அலுவலக உதவியாளர் காவலா் துப்புறவாளர் இல்லாத பள்ளிகள் ஏத்தனை ஏத்தனை ? அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். அவர் போதிக்க வேண்டிய அறிவியல் பாட வகுப்புக்கள் அந்தோ பரிதாபம் ? இதெல்லாம் நடைமுறைபிரச்சனைகள்.
Deleteநான் எழுதியிருப்பது அரசின் பாரபட்ச போக்கு குறித்து.அதைப்பற்றி ஆக்கப்புர்வமான கருத்தை ஒட்டியோ வெட்டியோ சொல்லாமல் என் இப்படி பண்பாடற்ற வாதங்களை முன் வைக்கின்றீர்கள். தங்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கின்றார்களா ? தனியார் நிதியுதவிபெறும் பள்ளியிலா ? ஆங்கில வழி பதின்மப்பள்ளியிலா ?
cugumar kd ne thaniyar school kalvi thanthaila oruthana? Ilana antha school partnera? Ila antha school broker agenta?
ReplyDeleteYour comment is highly absurd, and non-sense . I aim is to point out the dark aspect of our Governments' Educational Policy. I have initiated a debate on that.I request the readers to write their valuable comments.
Deletesaryaana kelvi ketteenga
DeleteWelcome for English medium school.
ReplyDeleteOne thing has to be remembered both Tamil and English are nothing but our eyes
ReplyDeleteஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,தரத்தை உயர்த்தவும் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவருவதாக அரசு கூறுகிறது.அரசுப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை செய்துகொடுக்காமல் ஆங்கில வழிக்கல்வியை மட்டும் கொண்டுவந்தால் எப்படி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.அரசின் நோக்கம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டு தானோ.கல்வியின் தரம் பற்றி கவலைப்படுவதாக இல்லை.அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை செய்துகொடுக்காமல் ஆங்கில வழிக்கல்வியை மட்டும் கொண்டு வந்தால் எப்படி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும்.கட்டிட வசதி,குடி நீர் வசதி,மாணவ -மாணவிகளுக்கான கழிப்பிட வசதி.ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்ற அடிப்படை வசதிகள் எத்தனை அரசுப்பள்ளிகளில் முழுமை பெற்றுள்ளது.எற்கனவே அரசுப்பள்ளிகள் அடிப்படைவசதிகள் இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது இப்பொழுது ஆங்கில வழிக்கல்விவேறு.தனியார் பள்ளிகளையும் அரசுப்பள்ளிகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தனியார்பள்ளிகள் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது.ஆனால் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.இந்த நிலையில் ஆங்கில வழிக்கல்வி. அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் 90% தமிழ் வழியில் பயின்று ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள்,இவர்கள் எப்படி ஆங்கில வழிக்கல்வியில் கற்பிப்பார்கள்.அப்படி கற்பித்தாலும் இக்கல்வியின் நோக்கம் நிறைவுபெறுமா?அப்படியென்றால் அமைச்சர்கள்,ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ் அதிகாரிகள்,பிற நிலைஅரசு அதிகாரிகள்,மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வீட்டுபிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்களா? இவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலே அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்,செய்வார்களா? செய்யமாட்டார்கள்.அவர்களுக்கு தெரியும் அரசுப்பள்ளிகளின் நிலை.மற்றவர்களின் குழந்தைகளை மட்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முனைவது என்ன நியாயம்.மேலும் அரசுபள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகத்தான் ஆங்கில வழிக்கல்வியை கொண்டுவருவதாக கூறுகிறது அரசு.அப்படியானால் தமிழ் வழிக்கல்வி தரம் தாழ்ந்ததா? தாய்மொழிவழியாக கொடுக்கும் கல்வியே முழுமைபெறும்.அரசே பிற மொழி வழிக்கல்வியை ஊக்குவிப்பது பேராபத்தாகும்.தாய் மொழிவழிகல்வி வழங்கிய நாடுகளே விரைவில் முன்னேறுகிறது.மொழியில் இல்லை கல்வியின் தரம்.பாடத்திட்டம்,பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு,ஆசிரியர்களின் கல்வித்தகுதி,சிறந்த நிர்வாகம் இதில்தான் உள்ளது கல்வியின் தரம்.இவற்றை சரிசெய்யாமல் எந்த மொழிவழியாகவும் கொடுக்கும் கல்வி விழலுக்கு இரைத்த நீராகும் நம் கல்விமுறை.
ReplyDeletei accept your point that , most of the teachers in government schools stuudied in tamil medium only. but they had completed thier degree courses like U.G , P.G , B.ED, M.ED , M.PHIL, &PH.D in ENGLISH medium only. so YOU should not tell that they they are not eligible for teaching in ENGLISH MEDIUM . if yuor point is right , i like to ask you a question ,whether teachers in private schools are well qualified, ? are they completed their studies only in ENGLISH medium?
Deleteஆம்.உங்கள் கருத்தை முற்றிலும் வரவேற்கிறேன.
Deleteஎதிர் கருத்தை வரவேற்கிறேன்.தமிழ் மொழியில் பயின்ற ஆசிரியர்களுக்கு திறமையில்லை என்ற கருத்தில் கூறவில்லை.அவர்களுக்கும் தேவையில்லாத மன உளச்சல்தானே.இந்த கருத்தில்தான் கூறினேன்.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான் முழுகல்வித்தகுதியோடு உள்ளனர்.அவர்களால் எந்த கல்வித்திட்டத்திலும் மிகச்சிறப்பாக கற்பிக்கமுடியும்.ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையோடு அரசுப்பள்ளி இயங்குகிறது.இப்போது ஆங்கில கல்விவேறு பாவம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
ReplyDeleteஆசிரியர்கள் தோ்வு வாரியம் துவக்கப்பட்ட நாளில் இருந்து நீதிமன்ற வழக்குகளைச் சமாளிப்பதற்கே கடும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் முறையாக ஆசிரியர்களை தேர்வு செய்து பள்ளிகளுக்கு அனுப்பும்பணி பாதிக்கப்பட்டு வருகினறது.
ReplyDeleteபள்ளிகளில் அனைத்து - ஆசிரியர் மற்றும் அமைச்சுப் - பணியிடங்களும் நிரப்பப்பட்டு பள்ளிகள் சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டும்.
கல்விச் சோலை இணையதளம் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் நடத்தப்படும் ஒரு அருமையான இணையதளம். இதில் ஆங்கில வழி வகுப்புக்கள் துவங்குவதில்
ReplyDeleteஅரசு பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி ஆதரித்தும் தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்க மறுத்து பாரபட்சம் காட்டி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களக்கு அநிதி செய்யும் அரசின் கொள்கை முடிவில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டினேன். ஆனால் எனது கடிதத்தில் உள்ள அடிப்படையான கருத்தைப்
புரி ந்து கொண்டு ஆதரித்தோ மறுத்தோ ஒருவர் கூட கடிதம் எழுதவில்லை.வம்படி வழக்காக இரு கடிதம் வந்துள்ளது.ஒரு ஆக்கப்புர்வமான விவாதம் செய்யக் கூட மன்ம் கொண்டோர் இல்லையா ?
பள்ளிக்கல்விியில் சுயநிதி என்ற திட்டம் தவறானது. பள்ளிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த சிறுபான்மை இந்து மேலாண்மை அரசு பள்ளி என்ற பேதமின்றி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். புதிய பள்ளி துவங்கவும் தரம்உயார்த்தவும் நீதியரசர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். அக்குழுவின் ஒப்பதல் பெற்றால் மட்டுமே ஒரு இடத்தில் புதிய பள்ளியோ ஏற்கனவே உள்ள பள்ளி தரம் உயர்த்தப்படவோ இயல வேண்டும். மேற்படிகுழுவின் ஒப்புதல் பெற்று தரம் உயர்த்தப்படும் துவக்கப்படும் தனியார் பள்ளிகளுக்கு முழுமையான நிதி உதவியை அரசு அளிக்க வேண்டும்.
ReplyDeleteஒரு சிறு ஊரில் 3 பள்ளிகள் செயல் படும் அவலம் பல
இடங்களில் உள்ளது.
எந்த மொழி கல்வி முறையை அரசு பள்ளியில் போதித்தாலும் ஆசிரியர் நியமனம் இல்லாமல் பேப்பரிலே அந்த முறையை கொண்டு வந்தோம் இந்த முறையை கொண்டு வந்தோம் என்பதெல்லாம் வெறும் வாய்பந்தலே
ReplyDelete