இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.மத்திய அரசு சட்டப்படி சம்பளத்துடன் கூடிய இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
விளக்கம் கோருவது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற சிறு அளவிலான தண்டனையே அவர்களுக்கு அளிக்கப்படுவதாக தொழிலாளர் நலத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த முறை வாக்குப் பதிவு, வேலை தினமான வியாழக்கிழமை வருவதால் விடுமுறை குறித்தஅறிவிப்புகளை தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com