இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு:
புதுவையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒர் அங்கமாக தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்து, தேர்தல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாவட்டத்தில் உள்ள 23 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 654 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி அதிகாரிகளாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3,224 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை மற்றும் பயிற்சி வகுப்புக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து தேர்தல் பணிச்சான்று
(படிவம் 12-ஆ) பெற்றுக் கொண்டு வாக்குப் பதிவின் போது பணியில் இருக்கும் வாக்குச்
சாவடியிலேயே வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிச் சான்றிதழ் பெறுவதற்கான விணணப்பப்படிவம், (படிவம் 12-அ) பணியாணையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அப்படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 கட்டங்களாக நடக்க உள்ளன. அதிகாரிகளுக்கான முதல் பயிற்சி வகுப்பு வரும் 22, 23 தேதிகளிலும், மற்றும் பிற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 26, 27 தேதிகளில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் அட்டவணைப்படி பயிற்சிகளில் கலந்து கொள்ள ஏதுவாக அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com